அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 காண்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து இருபத்தி மூணு நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பின்னர் மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார்.அவருடைய கண்களில் இருந்து அனைத்து லென்ஸ்க்களையும் எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்துள்ளது.
இதனை மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு இரவில் தூங்காதிர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க