Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் கன்னத்தில் பலார்னு அறைந்த மந்திரிக்கு எதிராக…. காங்கிரஸ் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

கர்நாடக வீட்டுவசதித் துறை மந்திரியாக பணிபுரிந்து வருபவர் சோமண்ணா. இவர் சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் இருக்கிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் குண்டலுபேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது மந்திரி சோமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து இச்சம்பவத்திற்கு மந்திரி சோமண்ணா மன்னிப்பும் கேட்டிருந்தார். எனினும் அவரை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் பெண்ணை கன்னத்தில் அறைந்த மந்திரி மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரி பெங்களூருவிலுள்ள கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் பெங்களூரு நகர காங்கிரஸ் பிரசார குழுவினர் புகார் கடிதம் அளித்துள்ளனர்.

Categories

Tech |