ஆந்திரா விமான நிலையத்தில் பெண்ணின் கைப்பையிலிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ஹைதராபாத் சென்ற பெண் ஒருவரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்து 13 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தகவலறிந்த ஆயுதப்படை போலீசார் அவரை ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.