Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் கொலை வழக்கு…. 4-வது கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன் பொத்தை பகுதியில் வெள்ளத்தாய்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் வெள்ளதாய் தனது தாய் சண்முக தாயுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தாய் முருகன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெள்ளத்தாயின் கழுத்தை இறுக்கி முருகன் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முருகனுக்கு 2000 ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |