பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த வாரம் வீட்டிற்கு முன்பு தவறி கீழே விழுந்ததால் லட்சுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது வீட்டிற்கு வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி செல்வதற்குள் உடல் கருகி லட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டார். அவருக்கு அருகே தீ எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையில் கேஸ் சிலிண்டர் இருந்ததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் தீயை அணைத்தனர். பின்னர் பெண்ணின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.