Categories
உலக செய்திகள்

பெண்ணின் தோலில் ஆடை தயாரித்த அரக்கன்…. முடிவு இல்லாமல் போகும் வழக்கு…..!!!!!!

போலந்து நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் திடீரென்று மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். Katarzyna Zowanda (32) எனும் அந்த இளம் பெண் மாயமாகி 2 மாதங்கள் ஆன சூழ்நிலையில், போலந்தில் உள்ள ஒரு நதியில் படகு ஒன்று பழுதாகி நின்றுபோனது. அப்போது படகு ஏன் நின்றது என பார்க்கும்போது, அதன் புரொப்பல்லரில் ஏதோ சிக்கியிருப்பது தெரியவந்தது. அது என்ன என்று ஆராயும்போது மனிதத்தோல் என தெரியவந்ததும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் அந்தத் தோல் காணாமல் போன Zowandaவினுடைய தோல் என தெரியவந்தது.

மேலும் அந்தத் தோல் வைத்து ஒரு உடை தயாரிப்பதற்காக Zowandaவினுடைய உடலிலிருந்து கவனமாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. அத்துடன் நிபுணர்கள் குழு, Zowanda பலமாக அடித்து உதைக்கப்பட்டு இருந்ததாகவும், அவரைத் தாக்கியவர் ஒரு மார்ஷியல் ஆர்ட் கலைஞராக இருக்கலாம் எனவும் தெரிவித்தது. இதில் Zowanda உயிருடன் இருக்கும் போதே அவரது உடலிலிருந்து தோல் உரிக்கப்பட்டு இருக்கலாம் என கருதும் நிபுணர்கள், அதனால் இரத்தம் வீணாகி அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆகவே கத்திக்குத்துக் காயங்கள், கீறல்கள் என Zowandaவின் உடலில் காணப்பட்ட காயங்கள் அவர் சித்திரவதை செய்யப்பட்டதையும், இறந்த பின் அவரைக் கொன்ற கொடூரக் கொலைகாரன் அவரது உடலுடன் உறவு கொண்டிருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது 1998ஆம் வருடம். ஆனால் பல்வேறு வருடங்களாக குற்றவாளி சிக்கவேயில்லை. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகப் பட்டியலில் இருந்த Robert Janczewski என்பவரது நண்பர் ஒருவர் காவல்துறையினருக்கு ஒரு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பினார். பின் Robert வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் அங்கிருந்த ஒரு கண்ணாடியில் இரத்தத்துளிகள் இருப்பதைக் பார்த்தனர். அதன்பின் அது Zowandaவின் இரத்தம் என உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து விசாரணையில் Robert ஒரு மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்பதும், அவர் பெண்களை துன்புறுத்திய பின்னணி கொண்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விலங்குகளின் உடல் பாகங்களை வெட்டும் உயிரியல் ஆய்வகம் ஒன்றில் பணிபுரிந்தபோது அங்கிருந்த விலங்குகள் மாயமானதும், பின்  Robert பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதுமட்டுமன்றி தனக்கு Zowandaவைத் தெரியாது என Robert கூறியுள்ள சூழ்நிலையில், பல முறை Zowandaவின் கல்லறைக்கு அவர் சென்றுள்ளார். இதனால் அவர் மீது கொலைக்கு ற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை தான் நிரபராதி என்றே கூறிவருகிறார்.

Categories

Tech |