கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் இளம் பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளம்பெண் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் அவரின் பெற்றோரும் உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மிபின் ஜோசப் என்ற இளைஞர் இளம் பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக இணையதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சவுமியா என்ற பெண் கூறியதால் தான் நான் இப்படி செய்தேன் என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சௌமியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்தப் பெண்ணின் கணவர் சௌமியாவின் முன்னாள் காதலர் என்றும்,இவர் சௌமியா விடம் படம் வாங்கி திருப்பி தர மறுத்ததால் ஆத்திரத்தில் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இருவரையும் பிரித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மார்பிங் செய்து அந்த பெண்ணிடம் படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.