Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் பெயரில் வந்த “குறுந்தகவல்”…. ரூ. 1 3/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர் பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை கேட்டு கொண்டார். அப்போது தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் மறுமுனையில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் மின்னஞ்சலில் விமான நிலையத்தில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதனை பதிவிறக்கம் செய்து கொண்ட வாலிபர் கடிதத்துடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அது போலியானது என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் அவருக்கு தெரிந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |