Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. தங்க நகையை “அபேஸ்” செய்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொண்டன்செட்டிபட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ராமன்செட்டிபட்டியில் 100 நாள் வேலை திட்ட பணிக்காக சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் செல்வியை பின் தொடர்ந்து சென்ற 2  வாலிபர்கள் இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது? என கேட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் செல்வின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நான்கு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் அவர்களின் கையில் பாதி நகையும், செல்வியின் கையில் பாதி நகையும் சிக்கியது. இதுகுறித்து செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |