தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயதான பெண்மணிக்கு வயிற்றிலிருந்து 20 கிலோ கட்டி நீக்கப்பட்டது .
சென்னையில் போன சில நாட்களுக்கு முன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , அந்த சிகிச்சையில் அவருக்கு 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி அகற்றப்பட்டது .
இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த 20 கிலோ எடையிலான கட்டியை அவருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வெளியில் எடுக்கப்பட்டதாகவும், இதுபோல சினைப்பை கட்டிகள் குறித்து, முதல் நிலையிலேயே மருத்துவமனைக்கு போய் எல்லோரும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் .