இளம்பெண் ஒருவரை கொன்று அவரின் வயிற்றைக்கிழித்து உள்ளிருந்த குழந்தையை திருடிய பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் Lisa Montgomary என்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கர்ப்பம் அடையாமல் இருந்துள்ளார். இதனால் கர்ப்பிணி பெண்ணான Bobbie Jo stinnet என்ற 23 வயதுடைய பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவரின் வயிற்றைக் கீறி கருவில் இருந்த குழந்தையை திருடியுள்ளார். மேலும் Lisa அந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று தன் குழந்தை என்று கூறியுள்ளார். இதனால் Lisaவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு Bobbieயின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தைக்கு 16 வயது ஆகும் நிலையில் இன்று தான் Lisaவிற்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் Lisaவிடம் உங்களுக்கு கடைசி ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். அதாவது 1953 ஆம் வருடத்திற்கு பின்பு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண் Lisa என்பது குறிப்பிடத்தக்கது.