பெரம்பலூரை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கரம்பியம் கிராமத்தில் வசிக்கும் ஓட்டுநரான வசந்தராஜ்(30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கு அந்த பெண்ணும் உடனடியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வசந்தராஜையும், உடந்தையாக இருந்த அந்த பெண்ணையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வசந்தராஜ்க்கு மனைவி இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.