Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொந்தரவு…. தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிப்பதாக கூறிய கிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் கிருஷ்ணனும் வேறு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் வந்த பெண்ணை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் அவரை தொந்தரவு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |