Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு உறுதியான தொற்று… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி ஊராட்சி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பகுதியில் வசித்து வரும் 54 வயது பெண் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விருப்பாச்சி ஊராட்சி தலைவர் மாலதி வெண்ணிலா சந்திரன் தலைமையில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியார் அந்த பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஊராட்சி செயலாளர் பிச்சைமணியும் இருந்தார்.

Categories

Tech |