Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு ஏற்பட்ட வலிப்பு…. செய்வதறியாது நின்ற மகள்…. பின் நடந்த சோகம்…!!

குளிப்பதற்காக சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரநகர் பகுதியில் பால்ராஜ் என்பவர் தனது மனைவி ரேச்சல் மற்றும் 5 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகளான கிருபாவிற்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரேச்சல் தனது கடைசி மகளான ஜெசிந்தாவுடன் குளிப்பதற்காக வைப்பாற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரேச்சலுக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார். இதனையடுத்து ஜெசிந்தா செய்வதறியாது அதிர்ச்சியடைந்தார்.

அதன்பின் ஜெசிந்தா தனது வீட்டிற்கு வேகமாக சென்று உறவினர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே ரேச்சல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரேச்சலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |