தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் மோசடி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் படத்தில் நடித்த போது அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வசித்து வரும் அந்தப் பெண், பணத்துக்கு கஷ்டப்படுவதாகவும், தன்னை விரும்புகிறேன், திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் கூறி ஏமாற்றியதாக பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.