Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. மருந்து கடைக்கு சீல்….!!

கருகலைப்பு மாத்திரை விற்ற மருந்து கடையை பூட்டி குடும்ப நலத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கொசவம்பாளையத்தில் வசித்து வரும் பிரகாஷ் என்பவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். கர்பிணியான இருந்த அவர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயசிங் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில் ரம்யா அந்த பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் கருகலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ரம்யா மாத்திரை வாங்கிய மருந்து கடைக்கு சென்றபோது கடை பூட்டி இருந்ததுள்ளது. இதனைதொடர்ந்து வெகு நேரமாகியும் கடையின் உரிமையாளர் வராததால் அதிகாரிகள் மருந்து கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |