Categories
உலக செய்திகள்

பெண்ணுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு…. பார்த்ததும் அதிர்ந்த அதிகாரிகள்….. விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

ஸ்காட்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட அழைக்கப்பட்ட பெண் திடீரென இறந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அப்டேட் பின் பகுதியை சேர்ந்த 80 வயதான கிறிஸ்டினா மாலி என்ற பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் தடுப்பூசி போட வராத காரணத்தினால் அவரது வீட்டிற்கு சென்று சுகாதார துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அப்போது கிறிஸ்டினா இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எப்போது இறந்தார்  என்றும், எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணையில் அதிகாரிகளால் உரிய காரணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து  நடந்த விசாரணையில் அவர் ஒரு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த கட்ட விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அவர் வீட்டிற்குள் விரிவான சோதனையில் ஈடுபட்டு பல ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |