பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 27 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் குமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தன்னிடம் பேசுமாறு பெண்ணிடம் கூறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.