Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்….. “2 லட்ச ரூபாயை” இழந்த வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!

வாலிபரிடம் 2 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீதா திருப்பூரைச் சேர்ந்த மணிராஜ் என்பவரிடம் பணம் கட்டினால் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என பழனிவேலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பழனிவேல் மணிராஜிடம் 2,60,000 வரை பணம் கட்டியுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணம் கிடைக்காததால், பழனிவேல் கீதாவிடம் சென்று தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கீதா, பழனிவேலை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பழனிவேல் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கீதாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |