உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் அடிப்படையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52), முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மூத்தபோலீஸ் அதிகாரி கூறியதாவது “உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் 45 வயதான சந்தீப் அடிக்கடி தொழில் காரணமாக டெல்லி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சென்ற 3-4 மாதங்களாக சந்தீப்பிற்கு பெண் ஒருவர் தொடர்ந்து போன்செய்து வந்துள்ளார்.
அவற்றில், அவரை தொழில் தொடர்பாக சந்திக்கவேண்டும் என தொடர்ந்து அப்பெண் கேட்டு வந்துள்ளார். அத்துடன் தன் கணவர் இறந்து விட்டதாகவும், 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அப்பெண் அவரிடம் கூறியுள்ளா். ஆகவே தனக்கு வேலை வேண்டும் என பெண் கூறியதை அடுத்து சந்தீப் அப்பெண்ணை ஒரு முறை சந்தித்துள்ளார். இதற்கிடையில் அப்பெண் ஒரு நபரை தன் உறவினர் என்று சந்தீப்பிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் சென்ற அக். 28ம் தேதி அவரை சந்திக்கவேண்டும் என அப்பெண் கூறியுள்ளார். பின் சந்தீப் இருந்த கர்தம்புரி என்ற பகுதிக்கே அப்பெண் வந்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருந்து அப்பெண்ணும், சந்தீப்பும் ஆட்டோவில் லஷ்மி நகரிலுள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது பெண்ணின் உறவினர் என கூறப்பட்டவரும் உடன்வந்துள்ளார். அந்த அலுவலகத்துக்குள் நுழைந்த உடனே அப்பெண்ணும் உறவினர் என கூறப்பட்ட நபரும், சந்தீப்பின் ஆடையை அகற்றத் துவங்கியுள்ளனர். அதற்கு சந்தீப் மறுப்பு தெரிவிக்க, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின் 6-7 பேர் அந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். அத்துடன் அவர்கள் தங்களை போலீஸ் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அங்கு நடப்பதை வீடியோ எடுக்க துவங்கியுள்ளனர். சந்தீப்பை பலமாக தாக்கிய அவர்கள், அவரிடமிருந்த பணத்தை திருடி உள்ளனர். அக்கூட்டத்திலிருந்த ஒருவர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறியுள்ளார். பின் அவர் துப்பாக்கி முனையில் சந்தீப்பிடம் ரூபாய். 20 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.
அத்துடன் சந்தீப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களிடமிருந்து ரூபாய்.20 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை 2 தவணையில் கொடுத்து விடுவேன் என கேமரா முன் கூறும்படி சந்தீப்பை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பணம் கொடுப்பதாக சந்தீப் ஒப்புக்கொண்ட பிறகே, அவர்கள் சந்தீப்பை விடுவித்து இருக்கின்றனர்” என்று கூறினார். பின் கடந்த நவ. 4ம் தேதி டெல்லி ஜோதி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்த சந்தீப் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றாவளிகளை தேட தனிப்படை ஒன்றை அமைத்தது. பல இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்று 3 பேரை கைது செய்தனர். அத்துடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மஹேந்திரா பொலேரோ காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.