Categories
தேசிய செய்திகள்

பெண்ணை அடிக்க ஓங்கும் ஆணின் கை உடைக்கப்படும்…. சுப்ரியா சுலே காட்டம்…..!!!!

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,கடந்த திங்கட்கிழமை புனேவில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென பாஜகவினருக்கும் என்சிபி தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பெண் தொழிலாளி பாஜகவினர் மீது குற்றம் சாட்டி அதையடுத்து பெண்ணை தாக்குதல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜகவை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெண்மீதான பாஜக தொண்டர்களின் செயலை சுப்ரியா சுலே கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இனி பெண்களை அடிக்க ஓங்கும் ஆணின் கைகள்  உடைக்கப்படும். பெண்ணை அடிக்க யாரேனும் இனி கை ஓங்கினால் தானே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் அடிக்க முயன்றவரின் கையை உடைத்து அவரிடமே கொடுத்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |