சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியில் முருமதா-செந்தில் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 5.10 மணிக்கு பெரும்மாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்ல வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்தை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தம்பதியினர் ஓட்டுநரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர். இதனால் தம்பதியினர் மற்றும் ஓட்டுநருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் முற்றியதில் அந்த ஓட்டுநர் பெண்ணை தாக்கியதில் அவர் மயக்கமடைந்து விழுந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இச்சம்பவம் பேருந்து பயணிகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பேருந்தை தாமதமாக எடுத்ததை கேள்வி கேட்ட பெண்ணை அடித்து தள்ளிவிட்ட பேருந்து ஓட்டுநர், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம்…! pic.twitter.com/dxwgW7yb9q
— Kishore Subha Ravi (@Kishoreamutha) February 2, 2022