உதவிகேட்டுச் சென்ற பெண்ணை, பாஜக எம்எல்ஏவும் அவரின் உறவினர்கள் 6 பேரும் கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான வல்லுறவுக் குற்றங்கள் அதிகம்நடக்கும் மாநிலமாக பாஜக ஆளும்உத்தரப்பிரதேசம் உள்ளது. அதிலும்,ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், முன்னாள் மத்திய அமைச்சர்சின்மயானந்தா உள்ளிட்டோர் ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பத்ரோகி பகுதியைச் சேர்ந்த- கணவரை இழந்த பெண்ஒருவர், பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத்திரிபாதியிடம் கடந்த 2014-ஆம் ஆண்டுஉதவி கேட்டுச் சென்றுள்ளார். அப் போது அந்தப் பெண்ணை திரிபாதி மிரட்டி பலமுறை வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திரிபாதியும் அவரது உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து, மீண்டும் விடுதி அறையொன்றில் அந்தப் பெண்ணை கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.