நாமக்கல்லில் கணவனை இழந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்லார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.