Categories
உலக செய்திகள்

பெண்ணை கொன்ற செம்மறி ஆடு…. நீதிமன்றம் போட்ட புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தெற்கு சூடான் நாட்டில் கோபத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின்(45) என்ற பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதனால் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆகவே பெண்ணின் இறப்புக்கு காரணமான அந்த ஆட்டை தெற்கு சூடான் காவல்துறையினர் தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர். அதாவது, கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு நீதிமன்றத்தால் 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையில் வாயில்லா ஜீவனாக இருந்தாலும் தப்பு தப்புதான் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம் ஆகும். பொதுவாகவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு உரிமையாளர் நிரபராதி எனவும் இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்து உள்ளனர். இப்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனை கிடையாதா எனில், ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என கூறிய நீதிமன்றம், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 பசுமாடுகளை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வளவோ வழக்குகளை பார்த்திருக்கிறோம், ஆனால் ஆட்டிற்கு சிறைதண்டனை விதிக்கப்படும் நிகழ்வை இப்போதுதான் கேட்கிறோம் என நெட்டிசன்கள் நம்ப முடியாமல் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |