உத்தரபிரதசேம் மாநிலம் ரசூல்பூரிலுள்ள நயா ரசூல் பகுதியில் கள்ளக்காதல் உள்ளதாக சந்தேகித்து தன் 28 வயது மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துணைக்காவல் கண்காணிப்பாளர் (நகரம்) முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியிருப்பதாகவாது “கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தன் மனைவியை அண்டை வீட்டாருடன் பார்த்ததாக கூறி ஆத்திரமடைந்துள்ளார்.
இதையடுத்து கோபத்தில் வந்த அவர் தனது மனைவியை கத்தியால் தாறுமாறாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். இந்த தம்பதியினருக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.