மயிலாடுதுறை மாவட்டத்தில் அபிராமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மூங்கில் தோட்டம் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அபிராமியின் கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் அபிராமி வினோத்குமார் விட்டு பிரிந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.
இதனை அடுத்து அபிராமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை வந்து தனது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இது குறித்து அறிந்த வினோத்குமார் தனது தாய் மற்றும் உறவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், கார்த்திக், திவ்யா ஆகியோருடன் அபிராமி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவரை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வினோத்குமார், அவரது தாய் மற்றும் உறவினரான இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், கார்த்திக், திவ்யா ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.