உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். தன் பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள், சுனில், அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை பழிவாங்க வேண்டும் என்றும், கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் பயல் திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக தன் காதலனான அஜய் தாக்கூரை, அவர் கூட்டு சேர்த்துள்ளார். அதன்பின் பயல் பாஹ்தி தன் காதலன் அஜய் தாகூருடன் கிரேட்டர் நொய்டாவிலுள்ள மாலுக்கு சென்றுள்ளார். அங்கு தன்னை போன்ற உடலமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஹேமா சவுதிரியை பயல் பார்த்துள்ளார். அதன்பின் அவருடன் நட்பாக பழகி பயல் மற்றும் அவரது காதலன் அஜய் இருவரும் ஹேமாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் ஹேமாவின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினர்.
இதனால் துடிதுடிக்க இறந்த ஹேமாவின் உடலில் பின், பயல் உடையை அணிவித்துள்ளனர். கொதிக்கும் எண்ணெய் முகத்தில் பட்டதால், தன் அழகு போய் விட்டதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்வதாக பயல் தன் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகில் போட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவானார். அதனை தொடர்ந்து ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் படி, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பயல் மற்றும் அவரது காதலன் அஜய் இருவரும் சேர்ந்து ஹேமாவை கொலை செய்தது தெரியவந்தது. பின் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.