மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் நிர்வாணமாக வீசி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா என்ற மாவட்டத்தில் 35 வயதான பெண் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு தனது சகோதரரிடம் சண்டையிட்டு சகோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விடுவதாக கூறி அழைத்துள்ளார். அவரை நம்பி சென்ற அந்த பெண்ணை அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பழைய வீட்டில் அவரை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி அந்த பெண்ணை சிறை பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் விட்டு சென்றுள்ளார். இதனால் உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண் அங்கிருந்த ஹன்ஹல்மோ என்ற பகுதிக்கு செல்ல, அங்கு உதவி செய்வதாக கூறி மேலும் இரண்டு இளைஞர்கள் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட, அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் .
பின்னர் அவரை நிர்வாணமாக சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் . அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் சிலர் இந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை தேடி வருகின்றன. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.