Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பிடித்த தி.மு.க-வினர்…. என்ன காரணம்….? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீதாராம் மேடு அருகில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஓசூர் பார்வதி நகரில் வசிக்கும் புஷ்பா என்பது தெரியவந்துள்ளது.

இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புஷ்பா அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையை போலியாக பயன்படுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |