தெலுங்கானா மாநிலத்தில் பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்பதற்காக பூஜை பொருட்களை எடுத்து அந்த பெண்ணின் வீட்டின் முன் இரவில் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவே அடுத்த குண்டல பள்ளி என்ற பகுதியை சேர்ந்த முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் இரவில் சில பெண்களுக்கு தொடர்பு கொள்வதும் எதிர்முனையில் பேசும் பெண்கள் குரல் நன்றாக இருந்தால் அவரை புகழ்வதால் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார். இதேபோல் ஒருநாள் ஒரு பெண்ணிடம் பேசும்போது அந்த பெண்ணின் குரல் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் மூன்று மாதங்களாக அந்த பெண்ணுடன் பேசி வந்துள்ளார். மேலும் தன்னை ராம்சரன் ரேஞ்சுக்கு அழகாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று கூற நேரில் சந்தித்த போதுதான் அந்த பெண் திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று அந்தப் பெண்ணை காதல் வலையில் விழுந்த நிறைத்த முரளி, திருமணம் ஆனாலும் பரவாயில்லை கணவனை விட்டுவிட்டு தன் உடன் வா என்று கூறியுள்ளார். அதற்கு மருத்த அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணை வசியப்படுத்த முடிவுசெய்த முரளி வசியம் செய்வது எப்படி என்று பேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் தெரிந்து கொண்டு சுடுகாட்டிற்குச் சென்று மனித எலும்புக்கூடுகள் மற்றும் மற்ற தேவையான பொருட்களை எடுத்து வந்து அந்த பெண்ணின் வீட்டின் முன் இரவு பூஜை செய்துள்ளார். அந்த பெண் காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருந்ததை கண்டு மிகவும் பயந்து உள்ளார். பின்னர் கிராம மக்கள் மற்றும் அந்தப் பெண் அனைவரும் சேர்ந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து செல்போன் நம்பர் மூலம் ஒரு அடியை கண்டுபிடித்த போலீசார் கைது செய்தனர்.