பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் எதுவும் தனக்கு ஞாபகம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் எங்கள் மகன் சிறுவயது முதலே மிகவும் நல்ல குணம் கொண்டவராகவும் அனைவரது மத்தியில் பிரபலமாக இருந்ததாக தெரிவித்தனர். போதைக்கு அடிமையாகி விட்டதாலேயே தற்போது இதுபோன்று நடந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.