உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தேஹாட் என்ற மாவட்டத்தில் போலீசாருக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்திக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
https://t.co/R6xsHpUV4r pic.twitter.com/oktTiMghWl
— Kanpur Dehat Police (@kanpurdehatpol) July 17, 2021
இந்த மோதலின்போது பெண் மீது ஒரு போலீஸ் ஏறி அமர்ந்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட் ஆர்த்தி கூறுகையில், அவர் என்னை அறைந்து கீழே தள்ளினார். அதன் பின் என் மீது ஏறி அமர்ந்து தாக்குதல் நடத்தினர். கிராமத்தினர் தலையிட்டு என்னை மீட்டனர் என்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் காவல் துறை சார்பில் எஸ்.பி தேஹத் இதை மறுத்து விளக்கமளித்துள்ளார். அதில், ‘அந்த பெண்தான் காவலரின் காலரை பிடித்திருப்பது வீடியோவில் தெரியும். அந்த பெண்ணும், குடும்பத்தினரும் காவலரை தடுத்ததால் அவர் கோபத்துடன் நடந்து கொண்டார். இருப்பினும் பாதிக்கபட்டவர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டும் நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.’ என்று எஸ்.பி உறுதி அளித்துள்ளார்.