தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறு குறு நடுத்தர வர்க்க தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மக்கள் நம் மீது அதாவது திமுகவின் மீது நம்பிக்கை வைத்து நம்மை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றவேண்டும். பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும்.
அவ்வாறு உங்களால் முடியாத பட்சத்தில் அதனை சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். காலையில் அளிக்கப்பட்ட புகாருக்கு மாலைக்குள் தீர்வு காண வேண்டும். பெண்கள் தைரியமாக சென்று பணியாற்ற வேண்டும் பெண் உறுப்பினர்கள் வலிமையுடன் செயல்பட அவரது குடும்பத்தினர் மற்றும் கணவர் ஆதரவு தரவேண்டும். பெண் உறுப்பினர்கள் தங்கள் பணிகளை தொடர அவருடைய குடும்பத்தினர் எந்த இடையூறும் செய்யக்கூடாது.” இவ்வாறு அவர் கூறினார்.