Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண் உள்ளிட்ட7 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபாலன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி சுசீலா(32). இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது கோபாலன் சின்னக்கரை அருகில் உள்ள பனியன் நிறுவனத்திலும் சுசிலா அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோபாலன் மாலையில் சின்னக்கரையில் இருந்து லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் இரண்டு சசாங் சாய் உத்திரவின்படி தனிபடை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

அப்போது கோபாலனின் மனைவி சுசீலாவும் அவர் வேலைக்குச் சென்ற பனியன் நிறுவனத்தின் மேலாளரான கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கோபாலனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேலாளர்ரான மாரீஸ்வரன்(26), விஜய்(28), மதன் குமார்(21), மணிகண்டன்(24), லோகேஸ்வரன்(20), வினோத்(28) மற்றும் கோபாலின் மனைவி சுசிலா ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் முன்மொழிவின்படி மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்படி 7 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் வினித் உத்தரவிட்டார். மேலும் அந்த ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |