ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதன்படி பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்ற பெயரில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பை தவறாக பயன்படுத்துவதாக கண்டறியப்பட்ட நிலையில் இதை தடுக்கும் விதமாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி,கோடை விடுமுறையில் பிரசவ தேதியை எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள் தங்களது மகப்பேறு விடுப்பு காலத்தை உண்மையான தேதியில் தொடங்குவதை குறிக்க வேண்டும். விடுமுறைக்காக பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதியை குறிப்பிடக் கூடாது.
அதாவது பல ஆசிரியர்கள் தங்களது மகப்பேறு விடுப்புகளை பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதியிலிருந்து தொடங்குவதாக குறிப்பிட்டு இதன் மூலம் இந்த விதியை தவறாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு அதிக விடுமுறைகள் கிடைக்கின்றது. இதை அடுத்து மகப்பேறு விடுமுறையை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் சில ஆசிரியர்கள் மகப்பேறு விடுமுறை காண விண்ணப்பத்தை தாமதமாக குறிப்பதால் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் தகுதியற்ற விடுமுறைகளை பெறுவதை அரசாங்கம் கண்டறிந்து உள்ளது.
எனவே மகப்பேறு விடுப்பு மார்ச் 31 அல்லது கோடை விடுமுறையின் தொடக்கத்திற்கு பிறகு முடிவடையும் ஆசிரியர்கள் தங்களது விடுமுறை நாட்களுக்குப் பிறகும் மகப்பேறு விடுப்புகளை தொடரலாம் என அரசு தெரிவித்துள்ளது.