பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. பல்வேறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமானது நீதிபதிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி வழங்கி இருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி – பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானது. காணாமல் போன ஆவணங்களின் நகலை 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சிபிசிஐடிக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.