பெண் காவலரான தன் மனைவியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் ரூம் போட திட்டமிட்டதை அறிந்த கணவர் ஆத்திரமடைந்துள்ளார்.
பிரிட்டனில் சர்ரே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருபவர் Nev Kemp(48). இவர் தன்னுடன் பணியாற்றும் ரேச்சல் ஜான்சன்(38) என்ற பெண் காவலருடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட திட்டமிட்டுள்ளார். இதையடுத்து kemp திட்டமிட்டுள்ள அந்த செய்தியை ரேச்சலிடம் தொலைபேசியில் தெரிவித்த போது எதிர்பாராத விதமாக அந்த அழைப்பு ரேச்சல் வீட்டு வாசலில் இருந்த கேமராவின் மூலமாக ரேச்சல் கணவருக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் அந்த உரையாடலை நேரலையில் கேட்ட காவலரான ஜான்சன் தன் மனைவியை அழைத்து விசாரித்தபோது தனக்கும், கான்ஸ்டபிள் kempக்கும் தவறான உறவு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை தொடங்க உள்ளனர்.