Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் பெண்களுக்கான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் அவர்கள் சிறப்பாக மக்கள் நலப்பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |