பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என்று அரசின் இந்த சலுகைகளை பெண் காவலர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சம்பளம் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய வட்டத்துக்குள்ளேயே பெண் காவலர்களை சுருக்கி விடுவார்கள். பெண்களுக்கும் திறமை, ஆற்றல் உண்டு. எனவே இந்த சலுகையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார்.