வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ராஜி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜியின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.