வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பாரதிராஜாவுக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாரதிராஜா தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதிராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.