தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பத்து வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம். இதற்கு தற்போதைய வட்டி 7 .6 சதவீதமாகும். சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.
குழந்தை பத்தாம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகை, திருமணத்தின் போது முழு தொகையும் பெறலாம்.எனவே பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.