அஞ்சலக சேமிப்பு திட்டமான இந்தச் சேமிப்பு திட்டத்தில், எப்படி வங்கியிலும் இணைவது குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் எப்படி இணைவது என்பது பெரும்பாலான மக்களிடம் இருக்கும் கேள்வியாகும். குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். அரசின் பெண் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தில், பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்கத் தகுதியுடையவர்கள். இந்தக் கணக்கினை தொடங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஒரு பெற்றோர் இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு கணக்குகளைத் தொடங்கிக் கொள்ள முடியும்.
இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகமும், சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. சில் வங்கிகளும் இந்தச் சேவையினை செய்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்தத் திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 250 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம், நிலவரத்திற்கு ஏற்றப்படி அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படுகிறது.
இந்தச் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உண்டு பெண் குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும்போது இந்தத் திட்டமும் முதிர்ச்சியடைகிறது. நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் செலுத்தப்படும். இந்தக் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்தக் கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்குத் தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும். ஆக உண்மையில் இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற ஓரு சேமிப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அரசின் இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்தப் பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்தக் கணக்கு தானாகவே மூடப்படும். காலாண்டிற்கு 7.6% ஆகும். இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் காலாண்டிற்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்குப் பங்கம் இல்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்தவொரு எஸ்பிஐ கிளையிலும் இந்தக் கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். இதற்காக இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், எவ்வளவு தொகை ஆரம்பத்தில் முதலீடு செய்யப்போகிறீர்கள். அதனை டிடியாகக் கொடுக்கப் போகிறீகளா? அல்லது செக் என்றால் அதன் எண், மற்றும் தேதி குறிப்பிட வேண்டியிருக்கும். அதனுடன் குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் எனப் பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனைச் சம்பந்தபட்ட எஸ்பிஐ கிளையில் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்தக் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இங்கு அடையாள அட்டையாகப் பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாகப் பான் அட்டையும் கொடுத்துக் கொள்ளலாம். அதோடு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
கணக்கின் நிலுவையை எஸ்பிஐயின் நெட் பேங்கிங் மூலமாக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். அதற்காக உங்களது இணைய வங்கியில் தெரிந்துகொள்ளலாம். அல்லது பாஸ்புக் மூலமாகவும் நீங்கள் அவ்வப்போது வங்கிக் கிளைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதே அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கினை தொடங்கியிருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பேலன்ஸினை தெரிந்து கொள்ள முடியும்.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒருவேளை 21 வயது பூர்த்தியாவதற்குள் திருமணம் முடிந்துவிட்டால் கணக்கு தானாகவே மூடப்படும். இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பெண் குழந்தையானது தனது 18 வயதை அடைந்த பிறகே பணம் திரும்பப் பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்பப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடங்கலாம். எனினும் இதற்காகக் குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம். இந்தத் திட்டத்தில் உள்ள வங்கி கணக்கை ஒரு வங்கிக் கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற முடியும். அது இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். எதிர்பாராத விதமாக ஏற்படும் முக்கிய காரணங்களுக்கான இந்த கணக்கினை மூடிக் கொள்ளலாம்.