அனைவருக்குமே தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்த பயம் என்பது இருக்கும். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு இன்னும் அதிகமாகவே பயம் இருக்கும். குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை எவ்வாறு சமாளிக்க போகின்றோம் எனும் கவலையில் இருந்து வருகின்றார்கள். பெண் குழந்தையின் எதிர்காலத்தில் நிதி பிரச்சனை வராமல் இருப்பதற்கு அரசின் இந்த அற்புதமான திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் மகள் 21 வருடங்களில் கோடீஸ்வரி ஆகலாம். இந்த திட்டத்தின் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா தமிழ்நாட்டில் இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்னும் பெயரில் இருக்கிறது.
இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 416 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் நீங்கள் முதலீடு செய்த 416 ரூபாய் என்பது எதிர்காலத்தில் ரூபாய் 65 லட்சம் ஆகும். இதன் மூலமாக உங்கள் மகளின் கல்வி செலவுகளை எளிதாக சமாளித்துக் கொள்ளலாம் சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது நீண்ட கால திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலமாக மகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க முடிகிறது. மேலும் இதற்காக பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியது இல்லை இந்த திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வந்திருக்கின்றது. அதில் புதிய விதிகளின்படி கணக்கில் தவறாக வரவு வைக்கப்பட்ட வட்டியை திரும்ப பெறுவதற்கான ஏற்பாடு நீக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் ஐந்து வட்டி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு முன் பெண் குழந்தை பத்து வயது நிறைவடைந்த உடன் கணக்கை இயக்கலாம் எனும் விதி இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய விதிகளின்படி பெண்ணிற்கு 18 வயதிற்கு பின் தான் கணக்கை இயக்க முடியும் இன்னொரு விதிமுறையும் மாற்றப்பட்டு இருக்கிறது.
இப்போது மூன்றாவது மகளின் பெயரில் கணக்கு திறக்க முடியும் இதற்கு முன்னர் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் வருமான வரி சட்டம் 80 சி யின் கீழ் வரி விலக்கின் பலன் இரண்டு மகள்களின் கணக்கில் மட்டுமே இருந்து வந்தது. இந்த பலன் மூன்றாவது மகளுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய விதியின்படி ஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் இரு பெயர்களிலும் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 டெபாசிட் செய்யாத பட்சத்தில் கணக்கு இயல்பு நிலையாகவே கருதப்படுகிறது. ஆனால் புதிய வட்டி விதிகளின்படி கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட்டு விட்டால் முதிர்வு வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு பொருந்தும் விதத்தில் இயல்புநிலை கணக்குகளுக்கு வட்டி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.