மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு, நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பெண் குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டங்களின் நோக்கம், மகள்கள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான முழுவாய்ப்புகளைப் பெறுவதும், அவர்கள் தன்னிறைவு பெறுவதும் ஆகும். தற்போது உங்களுக்கு மோடி அரசாங்கத்தின் மிகவும் லட்சிய திட்டம் பற்றிய தகவலை வழங்க இருக்கிறோம். இதுஒரு சிறு சேமிப்புத் திட்டம் ஆகும். இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களது பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்.
அந்த வகையில் இத்திட்டத்தின் பெயர் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகும். நாட்டின் பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை வடிவமைக்கும் அடிப்படையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களின் பெண் குழந்தையின் படிப்பு மற்றும் திருமணச் செலவுகளின் டென்ஷனிலிருந்து விடுபட விரும்பினால், இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். உங்களது பெண் குழந்தையின் 10 வயது (அல்லது) அதற்கும் குறைவாக இருந்தால் இந்த கணக்கைத் துவங்கலாம். இக்கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் (அல்லது) தபால் நிலையத்திலும் சென்று துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு ஆண்டில் ரூபாய்.250 -ரூபாய்.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மெச்சூரிட்டி அடைந்தவுடன் பெண் குழந்தை மட்டுமே கணக்கிலிருந்து இந்த பணத்தை எடுக்க இயலும். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்குக் கணக்குத் துவங்கலாம். 2வது முறையாக உங்களுக்கு இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், 3 பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதத்தை குறித்து பேசினால் ஆண்டு அடிப்படையில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம்) கிடைக்கும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூபாய்.1.50 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.12,500 முதலீடுசெய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் 14 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூபாய்.22.50 லட்சமாக இருக்கும். அதன்பின் பெண் குழந்தைக்கு 21 வயதான பின், உங்களுக்கு மொத்தம் ரூபாய்.63.65 லட்சம் கிடைக்கும். இது உங்கள் முதலீட்டுத்தொகையின் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். ஆகையால் 41.15 லட்சம் மொத்த வட்டியின் பலனைப் பெறுவீர்கள். உங்களின் பெண் குழந்தையின் 21 வயதில் இக்கணக்கின் மெச்சூரிட்டி காலம் ஆகும். இவற்றில் நீங்கள் அதிகபட்சம் 14 வருடங்கள் மட்டுமே முதலீடுசெய்ய வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகைக்கு அரசானது வட்டி சேர்த்துக் கொண்டே இருக்கும்.
அத்தகைய நிலையில் இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக நீங்கள் 3 மடங்கு வரை பலன்களைப் பெறலாம். அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைக்கு 18 வயதாகும் போது 50 சதவீதம் தொகையையும், 21 வயதில் முழுத்தொகையையும் திரும்பப் பெறலாம். இந்நிலையில் ஒவ்வொரு காலாண்டிலும் சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு மதிப்பாய்வு செய்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் 2022 உடன் முடிவடையும் காலாண்டிற்கு முன்பு, இத்திட்டங்களின் வட்டி விகிதங்களை அதிகரிக்க நிதியமைச்சகம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் 0.50 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இப்போது இத்திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது 8.30 சதவீதம் ஆக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.