நம் உடலுக்கு மல்பெரி நார்சத்தை அள்ளித் தரும் பழமாகும். இது நம் உடலில் செரிமானத்தை சீர் செய்யும் தன்மை கொண்டது. இத்தாலி நாட்டின் ஆய்வகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் எடை குறைப்புக்கு மல்பெரி பழங்கள் உதவும் என தெரியவந்துள்ளது.
இதயப் பிரச்னைகளை தடுக்க உதவும்:
மல்பெரி பழங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதயப் பிரச்னைகளைத் தடுக்க உதவும். குறிப்பாக வெள்ளை மல்பெரி பழங்கள் உடலின் சர்க்கரை அளவை சமன்செய்ய உதவுகிறது. மல்பெரியில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது உடம்பில் டியூமர் செல்கள் வளர்வதை தடுத்து புற்றுநோய் வருவதிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.
சிவப்பணுக்கள் நிறைந்த மல்பெரி:
உடலின் ரத்த ஓட்டத்தை சீர் செய்யவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மல்பெரி பெரிதும் உதவுகிறது. பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்தப் பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிவப்பணுக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
கண்களுக்கு நல்லது:
கேரட்களைப் போல மல்பெரியும் கண்களுக்கு நல்லது. இந்தப் பழத்தில் இருக்கும் ஜீயாக்ஸன்தின் (zeaxanthin) கண் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள கரோடெனாய்ட்ஸ் (carotenoids) கண்புரையை தடுக்க உதவும். வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் மல்பெரியில் நிறைந்து காணப்படுகின்றன.
சருமத்துக்கு அழகேற்றும் மல்பெரி:
மல்பெரி பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரோல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வயது அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் சரும சேதங்களில் இருந்து காப்பாற்றவும் உதவும். பீட்டா கேரோட்டின் எனப்படும் ஆண்டிஆக்ஸிடன்டுகள் சருமத்தில் சுருக்கங்களை குறைக்கும், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளையும் தடுக்கும்.