சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு கிடைப்பதை விட விட அதிக வட்டி கிடைப்பதால் பலர் இத்திட்டத்தில் விரும்பி சேருகின்றனர் இத்திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது அதாவது தமிழகத்தில் செல்வமகள் திட்டத்தில் இதுவரை 26.03 கணக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு துவங்க முடியும் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும். பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்து சுகன்யா சம்ரிதி திட்டம் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கு தொடங்கலாம்.
ஒரு நிதி ஆண்டில் ரூ.250 செலுத்தினால் அதிகபட்சமாக 1,50,000 வரை வைப்புத் தொகையாக செலுத்த முடியும். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது தற்போது 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து கணக்கு தீர்ப்பு பெரும் மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் இருந்து 50% கல்வி அல்லது திருமண செலவுக்கு பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் திருமணத்துக்கு பிறகு கணக்கு முதலீடுகள் அடைவதற்கு முன்பே கணக்கு எந்தவித இழப்பும் இல்லாமல் முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைந்த பெண் குழந்தைகள் திடீரென்று இறக்க நேரிட்டால் உடனடியாக இந்த கணக்கு திட்டம் முடிக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை பெற்றோர் இறந்து விட்டால் குழந்தையால் ஒவ்வொரு மாதமும் பணத்தை கட்ட முடியாது என்பதால் கணக்கு மூடப்பட்டு அந்த பணம் அந்த குழந்தையிடம் அல்லது குடும்பதாரிடம் கொடுக்கப்படும். மேலும் பெற்றோர் இறந்த பிறகும் அந்த குழந்தையின் பாதுகாவலர் அல்லது குடும்பத்தினர் தொடர்ந்து கட்ட விரும்பினால் முதிர்வடையும்போது குழந்தையிடம் முழு தொகையும் ஒப்படைக்கப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் அம்சமாகும்.