பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது மகள்கள் 6 பேரையும் டாக்டருக்கு படிக்க வைத்து ஆளாக்கி உள்ள கதையை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த சாய்னா என்ற பெண், தனது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது உறவினர் டிவிபி அகமது குஞ்சமை திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. பின்னர் அகமது குஞ்சமை சென்னையில் வியாபாரம் பார்த்தார். திருமணத்திற்குப் பிறகு கர்த்தார் சென்று அங்கு வேலை பார்த்து வந்த அவர் சிறிது நாட்களுக்குப் பிறகு தனது மனைவியுடன் கத்தாரில் குடிபெயர்ந்தார். அவர்களுக்கு ஆறு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
தங்களது மகள்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று யோசித்தனர். இதுகுறித்து சாய்னா கூறுகையில் ‘எனது பிரசவத்தைப் பற்றி எங்கள் ஊரில் கேள்விப்படும் போதெல்லாம் வருத்தப்படுவார்கள். ஆனால் நான் ஒரு துளி கூட கவலைப்படவில்லை. என் பெண் குழந்தைகளை வளர்ப்பதை நான் சுமையாக கருதவில்லை. என் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருந்தேன். நன்றாக படிக்க வைத்து அவர்களை நல்ல நிலைக்கு ஆளாகி உள்ளேன். முதல் நான்கு மகள்களும் தற்போது டாக்டராக பணியாற்றி வருகின்றனர். ஐந்தாவது மகள் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதியாண்டும், கடைசி பெண் மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்’.
இதில் சிறப்பு என்னவென்றால் முதல் நான்கு மகள்களுக்கும் டாக்டர் படித்த மணமகன்களை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதால் தனது ஆறு மகள்களையும் டாக்டர் ஆக்கியுள்ளார் சாய்னா. மேலும் மகளின் திருமணத்தின் பொழுது ஒரே துறையில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் புரிதல் இருக்கும் என்பதற்காக டாக்டர் படித்த மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தார்.
சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி விட்டு திரும்பிய தம்பதிகள் கேரளாவில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகமது மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது. தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மற்ற இரண்டு மகள்களுக்கும் டாக்டர் படித்த இளைஞர்களுக்கு மணம்முடித்து வைத்ததோடு, கடைசி இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்து வருகிறார்.